சங்ககிரி அருகே லாரியில் தீ விபத்து: காவல்துறையினர் விசாரணை
சங்ககிரி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகன டயர்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் டயர்கள் தீயில் எரிந்தன.


சங்ககிரி அருகே உள்ள ஊஞ்சக்கொரை பகுதியில் சனிக்கிழமை இரு சக்கர வாகன டயர்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் டயர்கள் தீயில் எரிந்தன.
தென்காசி மாவட்டம், ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன் என்பவர் மதுரை அருகே உள்ள மேலூரிலிருந்து கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஓசகோட்டே பகுதிக்கு கண்டெய்னர் லாரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் இரு சக்கர வாகன டயர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டுள்ளார்.
அப்போது சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஊஞ்சக்கொரை பகுதியில் லாரி செல்லும் போது எதிர்பாராத விதமாக லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநர் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது லாரியின் பின்பக்கம் தீ பற்றி புகை வந்ததையடுத்து லாரியிலிருந்த டயர்களில் சிலவற்றை கீழே தள்ளி விட்டு சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சென்ற சங்ககிரி தீயணைப்பு நிலைய வீரர்கள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க தீயணைப்பு வாகனம் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதையும் படிக்க | மதுரையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விபத்து: ஒருவர் பலி
சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் திடீரென தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...