ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சேலத்தில் சொத்து தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை: தம்பி கைது

சேலத்தில் சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 4:26 am

DIN

சேலத்தில் சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கோவிந்தராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன்கள் பெரியசாமி(62). சடையன்(57). இருவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரியசாமியை சடையன் அரிவாளால் தலை, கழுத்து மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதில் பலத்த படுகாயமடைந்த பெரியசாமி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை அதிகாலை பெரியசாமி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மல்லியகரை காவல் ஆய்வாளர் பொறுப்பு முருகேசன் வழக்குப் பதிவு செய்து சடையனை கைது செய்துள்ளார். 

பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.