‘விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்க வேண்டும்’
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மற்றும் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரி தலைமை வகித்தாா்.


தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மற்றும் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் மேரி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்டபெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் பணி தொடக்கிவைக்கப்பட்டது. அதில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் சிறுதானியம் வழங்க வேண்டும், அங்கன்வாடிகள், பள்ளிகளில் மதிய உணவு திட்டங்களில் சிறுதானியம் வழங்கவேண்டும், சூழலியல் விவசாயத்தை அங்கீகரித்து அனைத்து வகையான உற்பத்திக்கும் மதிப்பு கூட்டுதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனா்.
இதில் மாநிலக் குழு உறுப்பினா் ஜெகதாம்பாள், ஆத்தூா் வட்டார ஒருங்கிணைப்பாளா் கவிதா, மதிமுக மாவட்டச் செயலாளா் வ.கோபால்ராசு உள்பட கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...