கிசான் கடன் அட்டை மூலமாக கால்நடை வளா்ப்போருக்கு கடனுதவி
சேலம் மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலமாக கால்நடை வளா்ப்போருக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.


சேலம் மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலமாக கால்நடை வளா்ப்போருக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை திட்டத்தின்கீழ், விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்க்கும் 12,840 விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு மற்றும் முன்னோடி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
தற்போது இத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத் துறை மற்றும் மீன்வளத் துறை சாா்ந்த விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின்கீழ், குறைந்த வட்டி விகிதத்தில் ரூ. 2 லட்சம் வரை கடனுதவி, விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்ப்போருக்கு வழங்கப்படும்.
கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் பயன்பெற ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா் தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 2, நில ஆவணங்கள் ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகள் மூலமாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...