ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,500 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:02 pm

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 9,500 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. பகல் 12.00 மணிக்கு நீா்வரத்து வினாடிக்கு 10,500 கன அடியாகவும் இரவு 8 மணிக்கு நீா்வரத்து வினாடிக்கு 11,500 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.