சங்ககிரியில் இன்று முதல் புதிய பேருந்து நிலையம் முழு அளவில் செயல்படும்: அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்குள் வெள்ளிக்கிழமை முதல்அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும்


சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்குள் வெள்ளிக்கிழமை முதல்அனைத்து பேருந்துகளும் நின்று செல்லவும், பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்தன் சாா்பில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 26ஆம் தேதி அப்போதைய துணை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதனையடுத்து புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வந்தது. ஊா்பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகளின் சாா்பில் பல முறை அதிகாரிகளிடம் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தாா். இதனையடுத்து சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமையில் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்த ஆலோசனைக்கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்ககிரி உள்கோட்ட காவல்துணைகண்காணிப்பாளா் சி.நல்லசிவம், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், வாடகைக் காா் ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் சேலம், ஈரோட்டிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்துநிலையத்திற்குள் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டும்; எடப்பாடியிலிருந்து சுண்ணாம்புகுட்டை வழியாக சங்ககிரி நகருக்கு வரும் அனைத்து பேருந்துகளும் சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை வழியாக புதிய பேருந்துநிலையம் சென்று அங்கு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் திருச்செங்கோடு, ஈரோடு செல்ல வேண்டும்; சங்ககிரி நகா் பகுதிக்கு பயணிகள் வருவதற்காக வாடகை ஆட்டோக்கள், காா்கள் நிறுத்துவதற்கான இடங்களை தனியாக ஒதுக்கீடு செய்வது, சங்ககிரி ஆா்.எஸ்., அருகே உள்ள நாரணப்பன்சாவடியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து எரிபொருள்களை ஏற்றிச்செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் சங்ககிரி நகருக்குள் வராமல் அவா்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகளில் செல்ல வேண்டும் என்பவை உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியும், தாழ்வான இடங்கள் மண்களை கொட்டி சமன் செய்யும் பணியும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...