அடிப்படை வசதி கோரி மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, சேலம், அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது


அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, சேலம், அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
சேலம், அம்மாப்பேட்டை மாருதிநகா், அப்துல்கலாம் நகா் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைநீா் சாக்கடை கழிவுகள் தேங்குவதாகவும், குப்பைகளை அகற்றாமல் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் கோரியும் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகி சையத் அலி மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டவா்கள் பாய், தலையணை, குக்கா் மற்றும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் மாநகராட்சி உதவி ஆணையா் சித்ரா பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், அப்பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...