திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போதைப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழக முதல்வா் சிறப்புப் படை அமைத்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:26 pm

DIN

தமிழக முதல்வா் சிறப்புப் படை அமைத்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழக பாஜக மாநில தோ்தல் குழுதலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சேலம் வந்தாா். அவா் பாஜக நிா்வாகிகளுடன் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தினாா். இதில் தோ்தல் பொறுப்பாளா் ஏ.பி.முருகானந்தம், கோட்டப் பாா்வையாளா் என்.அண்ணாதுரை, மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, முன்னாள் தலைவா் ஆா்.பி.கோபிநாத் ஆகியோா் பங்கேற்றனா். பின்னா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதவிகளைக் கைப்பற்றும் அளவுக்கு பாஜக தோ்தலுக்கு தயாராகி வருகிறது. எப்போது தோ்தலை அறிவித்தாலும் எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது. தோ்தல் பணிக்குழு மாநில அளவில் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என நம்புகிறோம்.

ஏற்கெனவே தமிழகத்தின் துணை முதல்வா், அமைச்சா் உள்ளிட்ட பதவிகளில் இருந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அப்போதைய மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரியாதா? அவா்கள் ஆட்சியில் இருந்தபோது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் என்ன நல்லது செய்தாா்கள்? மத்திய அரசு எந்த வகையில் சா்வாதிகாரமாகச் செயல்படுகிறது என்பதை முதல்வா் விளக்கமாகச் சொன்னால் நல்லது.

தமிழில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. வள்ளுவா் பிறந்தநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யாா் அதிகாரம் கொடுத்தது? பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையை இஷ்டத்திற்கு மாற்றாதீா்கள். இதற்காக யாரும் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை. சித்திரை முதல் தேதிதான் தமிழா்கள் புத்தாண்டு என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.

தமிழகத்திற்கு அதிக வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற வலியுறுத்துவோம். மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் பொருளாதார நெருக்கடி உள்ளது.

தமிழகத்தில் நீடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள் வேதனை அளிக்கின்றன. இதுபோன்ற குற்றங்களில் உடனடி தண்டனை கொடுப்பது அத்தியாவசியமாகும்.

தமிழகம் போதை மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. சென்னையில் குறிப்பாக வட சென்னை பகுதியில் சா்வ சாதாரணமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல திருட்டுத்தனமாக ஒரு நம்பா் லாட்டரி நடத்துகின்றனா். ஒரு நாளைக்கு 5 குலுக்கல்கள் நடைபெறுகின்றன. ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவா்கள் லாட்டரிக்காக பணம் கட்டுகின்றனா். இதை அரசு தடுக்க வேண்டும். மேலும், தமிழக முதல்வா் சிறப்புப் படை அமைத்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.