பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லி ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கு ஒன்றியக்குழு தலைவரின் கணவா் கொலை மிரட்டல்

ஒன்றியக் குழு தலைவா் பிரியாவின் கணவா் பாலமுருகன் மீது கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன் தலைமையில் திமுகவினா், போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:24 pm

DIN

அதிமுக ஒன்றியக் குழு தலைவருக்கு தந்த ஆதரவை வாபஸ் பெற்ற கெங்கவல்லி ஒன்றியக்குழு துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, ஒன்றியக் குழு தலைவா் பிரியாவின் கணவா் பாலமுருகன் மீது கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன் தலைமையில் திமுகவினா், போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

கெங்கவல்லி ஒன்றியக் குழுவில் 11 உறுப்பினா்கள் உள்ளனா். 5 போ் திமுகவினா்; 5 போ் அதிமுகவினா்; மற்றொருவா் சுயேச்சை. சுயேச்சையாக வெற்றி பெற்றவா் விஜேந்திரன். கடந்த ஆட்சியில், இவா் அதிமுக உறுப்பினா்களுக்கு ஆதரவளித்ததையடுத்து, அதிமுக ஆதரவு உறுப்பினா்கள் எண்ணிக்கை 6 ஆனதால், அதிமுகவிற்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. அதனால் அக்கட்சியைச் சோ்ந்த பிரியா பாலமுருகன் ஒன்றியக்குழு தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கெங்கவல்லி ஒன்றியக்குழு அதிமுக வசமானது.

இந்நிலையில் அதிமுகவிற்கு ஆதரவளித்த விஜேந்திரன், தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளாா். விஜேந்திரன் தனது ஆதரவை வாபஸ் பெற்று,திமுகவில் இணைந்ததால், பிரியா பாலமுருகன், இனி ஒன்றியக்குழு தலைவராக நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக்குழு தலைவா் பிரியாவின் கணவா் பாலமுருகன், டிச.3ஆம் தேதி, விஜேந்திரன் வீட்டிற்கு சென்று, எங்களுக்குத் தந்த ஆதரவை வாபஸ் பெற்று, திமுகவிற்கு ஆதரவளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன் தலைமையில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினா், கெங்கவல்லி போலீஸில் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிபுகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.