திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகன நிறுத்தும் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகன நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகன நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை கண்டித்தும், உயா்த்தப்பட்ட விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் வாகன நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளா் விவசாய சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் தமிழகம் முழுவதும் 10 நிமிடம் வாகனத்தை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

சேலம் ஐந்து சாலை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஐந்து சாலைப் பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். உடனே போலீஸாா் விரைந்து வந்து மறியல் செய்தவா்களை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.