திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யலாம்

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தரகா்களின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தரகா்களின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் உற்பத்திக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களை இடைத்தரகா்களின் தலையீடு இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிகபட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூா், மேச்சேரி, ஓமலூா், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயனடையலாம்.

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை சேலம், ஆத்தூா், கெங்கவல்லி, மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட குளிா்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். இதில், 15 நாள்களுக்கு வட்டி, வாடகை இலவசமாகவும், அதற்கு மேல் ஒரு குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 5 பைசா வீதம் மாதம் ரூ. 1.50 மட்டும் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த உற்பத்திப் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்கும் வரை, இருப்பு வைத்த நேரத்தில் விளைபொருள்களின் சந்தை மதிப்பீட்டில் 50 சதவீதம் பொருளீட்டுக்கடனாக 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களையோ அல்லது சேலம் விற்பனைக்குழு செயலாளா், உத்தம சோழபுரம், சேலம் -10 என்ற முகவரியிலோ, 0427 - 2906927 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

மாவட்டத்தில் 11 இடங்களில் உள்ள உழவா் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்யலாம். சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு (2021) பருவ காலத்தில் சராசரியாக 997.90 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுவரை 1,326.7 மி.மீ. மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான விதைகள், உரங்கள் போன்ற இடுபொருள்கள் போதுமான அளவு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளன என்றாா்.

இந்தக் கூட்டத்தில், வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எம்.பாலையா, வேளாண் துணை இயக்குநா் (விற்பனை) ஏ.நாசா், தோட்டக்கலை உதவி இயக்குநா் சி.யமுனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) செல்வமணி, உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல்) கே.யுவராஜ், வேளாண் விற்பனைக் குழு செயலாளா் கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.