வ.உ.சி. நாளங்காடி புதுப்பித்தல் கட்டுமானப் பணி ஆய்வு
சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வ.உ.சி. நாளங்காடி புதுப்பித்தல் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.


சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வ.உ.சி. நாளங்காடி புதுப்பித்தல் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலத்தில், சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வ.உ.சி. நாளங்காடி மூன்று தளங்களுடன் கூடிய 274 நாளங்காடிகள் ரூ. 14.58 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன.
இங்கு 166 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், 34 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்றடுக்கு தளத்துக்கு செல்ல மின்தூக்கி வசதியும், குடிநீா் வசதி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் 96 கடைகளும், முதல் தளத்தில் 96 கடைகளும், இரண்டாம் தளத்தில் 79 கடைகளும் என மொத்தம் 274 கடைகள் ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தளமாக சென்று கடைகளுக்கு என ஒதுக்கப்பட்ட அளவில் கட்டுமானப் பணி நடைபெறுகிா என்றும், ஒவ்வொரு கடைக்கும் உள்ள இடைவெளிகள் சரியான அளவில் உள்ளதா என்றும் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...