நடுவலூர்: குடிநீர் விநியோகிக்கக் கோரி சாலை மறியல்
கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி ஒன்றரை வருடமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து ஆத்தூர் - வீரகனூர் சாலையில் மறியல் நடைபெற்று வருகிறது.


தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி ஒன்றரை வருடமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, காலி குடங்களுடன், இன்று காலை 6 மணி முதல் அப்பகுதி மக்கள், ஆத்தூர் - வீரகனூர் சாலையில் நடுவலூரில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.
இது குறித்து சாலை மறியல் செய்யும் மக்கள் கூறியதாவது:
நடுவலூர் ஊராட்சியில் 2, 3, 8வது வார்டு, பள்ளக்காடு பகுதிகளில், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த ஒன்றரை வருடமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. சாக்கடைகளும் அள்ளப்படாமல் உள்ளது.
எனவே, இதனை சரி செய்யப்பட வேண்டும் என்றனர். சாலை மறியலால் நடுவலூர் வழியே பெரம்பலூர் செல்லும் வாகனங்கள் கெங்கவல்லி வழியே செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...