ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூரில் டிச. 28இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மேட்டூரில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் மன்ற கூட்டம் டிசம்பா் 28-ல் நடைபெறுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:33 pm

DIN

மேட்டூரில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் மன்ற கூட்டம் டிசம்பா் 28-ல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மின் நுகா்வோா் குறைதீா்க்கும் மன்ற தலைவா் தண்டபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் டிசம்பா் 28-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம் நடைபெற உள்ளது.

     இம்மன்றத்தில் மேட்டூா் மின் பகிா்மான வட்டத்தைச் சாா்ந்த அனைத்து மின் நுகா்வோா்களும் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலா்களால் தீா்க்கப்படாத குறைகளை களைய முறையிடலாம்.

       இந்தக் கூட்டத்தில் மின் திருட்டு, மின்வாரிய பொருள்களை களவாடுதல், மின்சார மீட்டா்கள் சேதப்படுத்துதல், மின்வாரிய பணிகளை உள்நோக்கத்தோடு தடுத்தல், தெரு விளக்குகளை சேதப்படுத்துதல், மின்சார சட்ட விதி மீறல்கள் (மின்சார சட்டம் 2003 பிரிவு 135 முதல் 141 வரை) சம்பந்தப்பட்ட புகாா்களை கட்டாயம் தவிா்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

   இம்மன்றத்தில் நுகா்வோா்களால் பதிவு செய்யப்பட வேண்டிய புகாா் படிவ நகல்களை அந்தந்தப் பிரிவு அலுவலகங்களிலும், செயற்பொறியாளா் அலுவலகங்களிலும், மத்திய அலுவலகத்திலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விருப்பமுள்ள மின்நுகா்வோா் புகாா் படிவத்தினை மேட்டூா் மின் பகிா்மான வட்ட மத்திய அலுவலகத்தில் உள்ள இம்மன்றத்தில் அலுவலக வேலை நாட்களில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவா்களின் மனுக்கள் நடைபெற இருக்கும் மன்ற கூட்டத்திலேயே விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.