காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்: 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் முன்பகுதி சேதம் அடைந்த அரசுப் பேருந்து.
விபத்தில் முன்பகுதி சேதம் அடைந்த அரசுப் பேருந்து.
Updated on
2 min read

காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இரும்பாலை-கங்கை நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் அறிவழகன் (25), அருகே உள்ள பஞ்சமிகாடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் செந்தில்குமார் (24), வடிவேல் என்பவரது மகன்கள் கல்லூரி மாணவனாகிய பிரபு (23), சபரிராஜா (25) மற்றும் அப்பகுதியைச் அவரது நண்பர்களான ஜெகன் (24), கல்லூரி மாணவர் கோகுல்கிருஷ்ணன் (18), கந்தசாமி(24) ஆகிய 7 பேரும் பழனி கோயிலுக்கு வேன் மூலம் சென்றுள்ளனர்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் பழனியில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டு தாராபுரம் வழியாக காங்கயம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை அறிவழகன் என்கிற ராஜா ஒட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 12 மணியளவில் காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் தனியார் அரிசி ஆலை வந்து கொண்டிருந்தபோது, இவர்களது வேன் திடீரென எதிர்பாராத விதமாக எதிரே பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த செந்தில்குமார் மற்றும் வேனை ஒட்டி வந்த அறிவழகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் இருந்த பிரபு, ஜெகன், கோகுல்கிருஷ்ணன், கந்தசாமி, சபரிராஜா ஆகிய 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மேலும் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உடனடியாக அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் 5 பேரும் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.  நண்பர்களான ஜெகன், கோகுல்கிருஷ்ணன், கந்தசாமி, சபரிராஜா ஆகிய 4 பேரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் விபத்துக்குள்ளான வேன் முற்றிலும் சேதமடைந்தது. அரசுப் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com