கண்காட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள 60 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சுத்தப்பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், செடிபுட்டா சேலைகள், காட்டன் வேட்டிகள், பெட்ஷீட், ஜமுக்காளம், மெத்தை விரிப்புகள், தரைவிரிப்புகள், துண்டுகள், கொசுவலை, மற்றும் லுங்கிகள் ஆகிய கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்படி ரகங்களுக்கு அரசு தள்ளுபடி 30 சதவீதம் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிற்கு கைத்தறி ரகங்கள் விற்பனையாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.