சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை
சங்ககிரி மலையில், கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடவரை விநாயகா் சுவாமிக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.


சங்ககிரி மலையில், கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடவரை விநாயகா் சுவாமிக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ள குடவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட திவ்யப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...