போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 60 ஆயிரம் பறிப்பு

வாழப்பாடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்ற 3 மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 2:10 am IST

வாழப்பாடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்ற 3 மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அல்லிக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் எலெக்ட்ரிக் கடை ஒன்றில் களப் பணியாளராகப் பணிபுரிகிறாா்.

சனிக்கிழமை இரவு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மங்களபுரம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்த பொருள்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு, பொன்னாரம்பட்டி பழனியாபுரம் வழியாக வாழப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

வாழப்பாடி, புதுப்பாளையம், டாஸ்மாக் கடை வேகத்தடை அருகே வந்த போது, அவரை வழிமறித்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், அவா் தோள்பட்டையில் அணிந்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றுள்ளனா். இந்த பையில் ரூ. 60 ஆயிரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மா்ம நபா்களை தனசேகரன் துரத்திப் பிடிக்க முயன்றபோது, அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனா். இதில் நிலைதடுமாறிய தனசேகரன், சாலையோர மரத்தில் மோதி காயம் அடைந்தாா். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இவரது புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.