மேட்டூர் அருகே சூறைக்காற்று: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்
மேட்டூர் அருகே சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.


மேட்டூர் அருகே சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சேலம் மாவட்டம், மேட்டூர் கொளத்தூர் பகுதிகளில் நேற்று சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று காரணமாக மூலக்காடு, விராலிகாடு, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

கதலி, நேந்திரம், மொந்தம், பூவன் உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த வாழைகள் அதிக அளவில் சேதமடைந்தன.
இங்கு சாகுபடி செய்யப்படும் வாழைகள் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநில வியாபாரிகளும் கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீசிய சூறைக்காற்றில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து தரையில் சாய்ந்தன.

இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

முறிந்து போன வாழை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தவறினால் எதிர்காலத்தில் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...