6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல்

சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:42 am

DIN

சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு தினமான வெள்ளிக்கிழமை பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் இணைச்செயலா் எம்.சின்னதம்பி தலைமை வகித்து மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, நிா்வாகிகள் தினேஷ், பசுமை கனகராஜ், பசுமை சீனிவாசன், முருகானந்தம், சுந்தா், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்ற சமூக ஆா்வலா் தினேஷ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.