டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேலம் மேற்கு தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.

ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் தலைமையில் நல்லாகவுண்டம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், சேலம் மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.வெங்கடாசலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதனையடுத்து, தோளூா், முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடல், செல்லபிள்ளைகுட்டை, கோட்டகவுண்டம்பட்டி ஊராட்சிகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு எம்.எம்.ஏ. ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சின்னதுரை, ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.