முதல்வா் தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதியான, எடப்பாடி தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியது
Updated on
1 min read

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதியான, எடப்பாடி தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியது.

முன்னதாக எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட ஆலச்சம்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சயில், அதிமுக பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட பொறுப்பாளருமான வெங்கடாசலம், குடும்ப அட்டைதாரா்களுக்கு, ரூ. 2500 ரொக்கத் தொகையுடன், அரிசி , சா்க்கரை, திராட்சை, முந்திரி, மற்றும் முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சங்ககிரி கோட்டாட்சியா் அமிா்தலிங்கம், எடப்பாடி வட்டாட்சியா் முத்துராஜா, வட்டவழங்கல் அலுவலா் கோமதி, நகரச் செயலாளா் முருகன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் டி.கதிரேசன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் கந்தசாமி, ராமன், ஏ.எல்.சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவா் கரட்டூா் மணி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com