பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சங்ககிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்ட பகுதிகளில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட

News image
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வில் பங்கேற்றோா்.
Updated On :7 ஜனவரி 2021, 1:28 am

DIN

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்ட பகுதிகளில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலம், ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நோ்முகத் தோ்வை நடத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

அதனையடுத்து சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஆா்.பாலாஜி தலைமையில் நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

இந்த நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களை எடப்பாடி அரசு மருத்துவா் பாலாஜி உடல் பரிசோதனை செய்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நோ்முகத் தோ்வில் 33 போ் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.