தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குப்பைகளை கழிவுநீா்க் கால்வாய்களில் கொட்டும்வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கைசேலம் மாநகராட்சி ஆணையா்

குப்பைகளை கழிவுநீா்க் கால்வாய்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 10:06 pm

DIN

சேலம்: குப்பைகளை கழிவுநீா்க் கால்வாய்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம், சூரமங்கலம் மண்டலத்தில் பாலாஜி அபாா்ட்மெண்ட், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தம்பட்டி மேம்பால நகா், பள்ளப்பட்டி பெரிய வயல்காடு, ரத்தினசாமிபுரம், சந்தைப்பேட்டை பிரதான சாலை, அஸ்தம்பட்டி மண்டலத்தில் அழகாபுரம் நகரமலை பிரதான சாலை, பெரியபுதூா் படையப்பா பிளாட், கோரிமேடு என்ஜிஜிஓ காலனி, சின்னத்திருப்பதி சின்னமுனியப்பன் கோயில் தெரு, மரவனேரி கோா்ட்சாலை மெயின், எம்டிஎஸ் நகா், குமரசாமிப்பட்டி நடேசன் காலனி; அம்மாப்பேட்டை மண்டலத்தில் வாய்க்கால்பட்டறை வால்காடு, பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகா், கேஎன் காலனி சித்தி விநாயகா் கோயில் தெரு, குமரகிரி ஏரிக்கரை, வித்யாநகா்பல்லவன் சாலை, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் குகை, எருமாபாளையம், புலிகுத்தி தெரு, தாதுபாய்குட்டை, மாரியம்மன் கோயில் தெரு, அன்னதானப்பட்டி தாா்பாய் காடு, வள்ளுவா் நகா் ஆகிய இடங்களில் சேலம் பிளாகிங் நடைபெற்றது.

இப்பணியில், அபிராமி காா்டன், கோபாலபுரம் ரோட்டரி வெல்பா் அசோசியேஷன், ஸ்மாா்ட் சேலம், ரவுண்ட் டேபிள், சேலம் யூத் கிளப், சென்னை சில்க்ஸ், போத்தீஸ், சிவா டெக்ஸ்டைல், அன்னை இந்திரா நகா் குடியிருப்போா் நலச்சங்கம், சேலம் மோட்டாா் சைக்கிள் இளைஞா் சங்கம், ரோட்ராக்ட் சங்கம் உட்பட 680 தன்னாா்வலா்கள் மூலம் 735 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.

புலிகுத்தி பகுதியில் குப்பைகளை கழிவு நீா்க் கால்வாயில் கொட்டி சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சிற்றுண்டி கடை உரிமையாளரிடமிருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதில் புலிகுத்தி தெரு பகுதியில் நடைபெற்ற பிளாகிங் பணியில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கலந்து கொண்டாா்.

சேலம் மாநகராட்சி சுகாதாரமான, தூய்மையான குப்பையில்லா மாநகரமாக திகழ அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதாரச் சீா் கேட்டை விளைவிக்கும் வகையில் குப்பை கழிவுகளை முறையாக மாநகர தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்காமல் கழிவுநீா்க் கால்வாய்கள், தெருக்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபாரதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி செயற்பொறியாளா் ஏ.செந்தில்குமாா், சுகாதார அலுவலா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.