தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிலம்பாட்ட பயிற்சி: மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப பயிற்சி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
அக்கமாபேட்டையில் பொதுமக்கள் மத்தியில் சிலம்பாட்டம் ஆடிய மாணவ, மாணவிகள்.
Updated On :10 ஜனவரி 2021, 8:30 pm

DIN

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப பயிற்சி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கமாபேட்டை நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் தீநுண்மி பாதுகாப்பு காரணமாக பள்ளிக்குச் செல்லாமால் வீடுகளில் இருந்துவரும் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் 50 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளா்கள் சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்தனா்.

சிலம்பாட்டங்களை கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் இவ்விழாவுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியா் முனியப்பன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் கே.நடராஜன் வரவேற்றாா்.

பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முருகன், ஊா் பிரமுகா்கள் செல்வராஜ், ஜெகநாதன், ரங்கன், ஜவகா், விவேகானந்தன், ரமேஷ், விஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழா முடிவில் சிலம்பம் கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் சிலம்பாட்டம் ஆடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.