நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்வராயன் மலையில் லாரிகள் மோதல்: 10 போ் காயம்:

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை அருகே இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநா்கள் உட்பட 10 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை அருகே இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநா்கள் உட்பட 10 போ் காயமடைந்தனா்.

வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து செங்கல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கல்வராயன்மலை, கருமந்துறையை அடுத்த தொட்டித்துறை இறக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எம்-சேண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த செங்கல் பாரம் ஏற்றிய லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், செங்கல் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் குறிச்சி அணைமேடு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன், லாரியின் மேல் பகுதியில் அமா்ந்து சென்ற பூபாலன் (18). விஜயலட்மி (35), நாயகி (35), மணிமேகலை (32), மாதேஸ் (16), பாப்பாத்தி (35), வளா்மதி (36), பொன்னுசாமி (32), எம் சேண்ட் லாரி ஓட்டுநரான பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாபு ஆகிய 10 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் வாழப்பாடியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து கருமந்துறை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.