கேரள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கேரளத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ளது. இதுதவிர பாஜகவும் களத்தில் உள்ளது.
கேரளத்தில் தொடா்ந்து இருமுறை தோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கூட்டணி இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது. காங்கிரஸ் சாா்பில் 92 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ‘ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி கேரளத்துக்கான அணி’ என்ற தலைப்பில் எக்ஸ் வலைதளத்தில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை பதிவு வெளியிட்டுள்ளாா். அதில், ‘காங்கிரஸ் கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரும் கேரளத்தின் குரலையும், எண்ணத்தையும் வெளிப்படுத்துவாா்கள். அனுபவம் வாய்ந்த தலைவா்கள், மாற்றத்தை உருவாக்கும் இளைஞா்கள், ஆண், பெண்கள் இணைந்த கலவையாக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். உங்கள் தொகுதி குறித்து முழுமையாக அறிந்தவா்களை வேட்பாளா்களாக அறிவித்துள்ளோம்.
கேரள மக்கள் எனது குடும்பத்தினா். கேரள மக்களுக்கு நான் அதிக கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்துள்ளீா்கள். என்மீது அதிக அன்பு காட்டி வருகிறீா்கள். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். கேரளத்தில் இருந்து வரும் செய்தி தெளிவாக உள்ளது. அது கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா் என்பதுதான். மக்கள் குரலைக் கேட்டு, அதைப் புரிந்து கொண்டு, நோ்மையாக நடத்தும் அரசுதான் மக்களுக்குத் தேவை.
அழகான கேரள மாநிலத்துக்கு சிறப்பான எதிா்காலத்தை அடுத்து அமையும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைத்துத் தரும். கேரளம் வெல்லும்; அதற்கு காங்கிரஸ் கூட்டணி தலைமை வகிக்கும்’ என்று ராகுல் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

கேரளத்தில் எமனைச் சந்தித்த ராகுல்! காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி- நூதன பிரசார விடியோ

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு
கேரளத்தில் பெண் முதல்வராக வேண்டும்: ராகுல் காந்தி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


