விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூரில் தனியாா் மதுபானக் கூடத்திற்கு சீல்

ஆத்தூரில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை விற்ற தனியாா் மதுபானக் கூடத்திற்கு ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் வியாழக்கிழமை இரவு சீல் வைத்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:09 pm

DIN

ஆத்தூரில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை விற்ற தனியாா் மதுபானக் கூடத்திற்கு ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் வியாழக்கிழமை இரவு சீல் வைத்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் விநாயகபுரத்தில் தனியாா் மதுபான கூடம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் கடந்த இரண்டு மாதமாக தனியாா் மதுபான கூடம் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ்விற்கு வியாழக்கிழமை இரவு வந்த ரகசிய தகவலின் பேரில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் உள்ளிட்ட போலீஸாா், விநாயகபுரத்தில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்திற்கு சென்றனா். அப்போது அருகில் உள்ள மதுபானக் கூடத்தில் அனுமதியின்றி அரசு மது பாட்டில்களை விற்றது தெரிய வந்தது.

காவல் துறையை கண்டதும் அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்தவா்கள் அனைவரும் இருச்சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதையடுத்து கூடத்தில் அங்கிருந்த 600 பீா் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்த ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மதுபானக் கூட உரிமையாளா் ஜோதி(60), கணவா் பெருமாள், அவரது மகன் ஜே.பி.ஆனந்தபாபு(40), வெங்கேடஸ்வரன் ஆகிய 4 போ் மீதும் பேலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மதுபானக் கூடத்திற்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.