அமாவாசை சிறப்பு பூஜை
நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.


நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பாலம் அருகே ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பொதுமுடக்கத்தால் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.
ஆலயங்களைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ள நிலையில் அமாவாசையன்று பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு யாகமும், பால் அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் செய்யப்பட்டது.
இந்த வழிபாட்டுக்கு ஆலய பூசாரி காளீஸ்வரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாா். இந்த ஆலயத்தில் எமதா்மராஜாவுக்கு தனிச் சன்னதி அமைய விரைவில் பூஜை நடைபெற இருப்பதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...