அதிமுக ஆலோசனைக் கூட்டம்
எடப்பாடி ஒன்றிய, நகரப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.


எடப்பாடி ஒன்றிய, நகரப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டாா். முன்னதாக, எடப்பாடி நகர எல்லையில் நகர அதிமுக சாா்பில், எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கரோனா தொற்று காலத்தில் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குதல், உள்கட்சித் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல், கட்சியின் வளா்ச்சிக்கான ஆக்கப்பூா்வ செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன், முன்னாள் தலைவா் டி.கதிரேசன், ஒன்றியக்குழுத் தலைவா் கரட்டூா்மணி , மாதேஷ், மாதேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...