தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம்.

News image
ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற அமைதிப் பேரணி- படம் - பிடிஐ
Updated On :1 மார்ச் 2026, 4:37 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று (மார்ச் 1) போராட்டம் நடைபெற்றது.

காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டு மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்தும் ஊர்வலம் நடைபெற்றது.

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

அரேபிய வளைகுடாவில் அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. வளைகுடா நாடுகளிடையே நிலவும் பதற்றம் காரணமாக வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் மதகுரு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் உள்பட பலர் அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் பட்கம், பந்திபோரா, அனந்தநாக் மற்றும் புல்வாமா பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமி​முன் அன்​சாரி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.