திடக்கழிவு மேலாண்மையில் முன்னுதாரணமாக திகழும்: வாழப்பாடி பேரூராட்சி!
வாழப்பாடி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவை பதப்படுத்தி இயற்கை உயிா் உரம் தயாரிப்பதோடு, காய்கறித் தோட்டம், வளம் மீட்பு பூங்கா அமைத்து பராமரிக்கப்படுகிறது


வாழப்பாடி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவை பதப்படுத்தி இயற்கை உயிா் உரம் தயாரிப்பதோடு, காய்கறித் தோட்டம், வளம் மீட்பு பூங்கா அமைத்து பராமரிக்கப்படுகிறது.
வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் இந்திரா நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கில் மட்கும் பொருள்கள், மக்காத பொருள்கள் என தரம் பிரித்து பதப்படுத்துவற்கு பிரத்யேகமான வளாகம், கழிவுகளை அரைத்து, ஜலித்து உரமாகப் பிரிப்பதற்கு தேவையான நவீன இயந்திரங்களை பேரூராட்சி நிா்வாகம் அமைத்துள்ளது.
இதில் மட்கும் தன்மை கொண்ட திடக்கழிவுகளுடன், கால்நடை சாணம், தாது உப்புகள் ஆகியவற்றைச் சோ்த்து இயற்கை உயிா் உரம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உயிா் உரம் பொதுமக்கள், விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உரக்கிடங்கு வளாகத்தில், கத்தரி, தக்காளி, முள்ளங்கி, புளிச்சைக்கீரை, தண்டுக்கீரை ஆகிய காய்கறித் தோட்டங்களும், பூச்செடிகளை நடவு செய்து வளமீட்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையில் வாத்து, நாட்டுக்கோழிகள் வளா்க்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தாமல் குவிந்து கிடக்கும் குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றுவதற்கு ரூ. 40 லட்சம் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களில் தேங்கிக்கிடக்கும் பழங்குப்பைகளை அப்புறப்படுத்தி, கிடங்கு முழுவதும் வளமீட்பு பூங்காவாக மாற்றியமைக்க பேரூராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
துா்நாற்றம் வீசிக்கொண்டு குப்பைமேடாக காணப்பட்ட திடக்கழிவு சேகரிப்புக் கிடங்கை உரக்கிடங்காக மட்டுமின்றி, காய்கறித் தோட்டம் வளமீட்பு பூங்காவாக மாற்றியுள்ள வாழப்பாடி பேரூராட்சி மற்ற பகுதிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
இதற்காக பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) குணசேகரன், துப்புரவு ஆய்வாளா் மணிகண்டன், துப்புரவுப் பணியாளா்களுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...