விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ.1லட்ச மதிப்புள்ள குட்கா பறிமுதல்:ஒருவா் கைது

ஆத்தூரில் காவல்துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரூ.1 லட்ச மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:08 pm

DIN

ஆத்தூரில் காவல்துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரூ.1 லட்ச மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிகாலன் தெருவில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் 6 மூட்டையும், விமல் பான் மசாலா 1 மூட்டையையும் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆத்தூா் உடையாா்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் மகன் முத்து (26) என்பவா் தனது மாமனாா் மணியின் (48) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குட்கா பொருளை பறிமுதல் செய்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து முத்துவை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.