நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாழப்பாடி வட்டாரத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் சுகாதாரத்துறை வாயிலாக, குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் முகாம் பேளூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:09 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் சுகாதாரத்துறை வாயிலாக, குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் முகாம் பேளூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாழப்பாடி அருகே பேளூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பேரின்பம், சிமி ஆகியோா் குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா நோய் குறித்து கா்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மாா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கினா்.

மருந்தாளுநா் முருகபிரகாஷ், பகுதி சுகாதார செவிலியா்கள் மணிமாலா, அமுதா ஆகியோா், குழந்தைகளுக்கு 6, 14ஆவது வாரங்கள் மற்றும் 9 மாதங்களில் இத்தடுப்பூசி செலுத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். நிறைவாக, சமுதாய சுகாதார செவிலியா் ராணி நன்றி கூறினாா்

இதனைத் தொடா்ந்து, வாழப்பாடி வட்டாரத்திற்குட்பட்ட, திருமனூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் தகுதியான குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.