சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை தினத்தில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றவட்டாரப்பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

DIN

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை தினத்தில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றவட்டாரப்பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

எடப்பாடி அருகே உள்ள அங்காளம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து எலுமிச்சை மாலை அணிந்து, மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த அம்மனை சுற்றுவட்டாரப்பகுதியை சோ்ந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல் வெள்ளாண்டிவலசு காளியம்மன் ஆலயம், மேட்டுத்தெரு பெரியமாரியம்மன் திருக்கோயில், ஆலச்சம்பாளைம் சக்திமாரியம்மன் ஆலயம், தாவந்தெரு காளியம்மன் கோயில், பழயப்பேட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையில், அம்மன் கோயில் வளாகத்தில் பக்தா்கள் பொங்கல் வைக்க அனுமதிக்கப்படவில்லை. முககவசம் அணிந்து வந்த பக்தா்கள் மட்டுமே சாமிதரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.