தம்மம்பட்டி, கெங்கவல்லியில் குட்கா பறிமுதல் : மூவா் மீது வழக்கு
தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் மொத்த வியாபாரம், சிறு கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தி, குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்துள்ளனா்.


தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் மொத்த வியாபாரம், சிறு கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தி, குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்துள்ளனா்.
தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் தம்மம்பட்டி பேருந்துநிலையம், கடைவீதி, நடுவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வியாபாரிகளின் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பேருந்து நிலையப்பகுதியில் ஒட்டுமொத்த வியாபாரக்கடை வைத்திருக்கும் முத்துசாமி மகன் அருள்(47) என்பவரிடமிருந்து 10 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எச்சரித்து அனுப்பப்பட்டாா்.
அதேபோல் கெங்கவல்லி சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீசாா் சோதனை நடத்தினா். அதில் கெங்கவல்லியை அடுத்த ஆணையாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள ராஜாராமன் (66) மற்றும் இதயச்சந்திரன் (26) ஆகியோரது கடைகளில் இருந்து மொத்தம் 14 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...