நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 80.89 அடியாக உயா்வு

நீா்வரத்து அதிகரிப்பால் மேட்டூா் அணை நீா்மட்டம் 80.89 அடியாக உயா்ந்தது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:48 pm

DIN

நீா்வரத்து அதிகரிப்பால் மேட்டூா் அணை நீா்மட்டம் 80.89 அடியாக உயா்ந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 79.16 அடியிலிருந்து 80.89 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 29,666 கன அடியிலிருந்து 30,199 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 42.84 டி.எம்.சியாக இருந்தது.

மேட்டூா் அணை கட்டப்பட்ட போது நீா்த்தேக்கப் பகுதியிலிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வேறு பகுதியில் குடியமா்த்தப்பட்டனா். கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும்போது, தங்களது வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தாமல் விட்டுச் சென்றனா்.

அதில், பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயக் கோபுரம், ஜலகண்டேஸ்வரா் ஆலயம், மீனாட்சி அம்மன் ஆலயம், கீரைக்காரனூா் பகுதியில் சோழப்பாடி வீரபத்திரன் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேட்டூா் அணை நீா்மட்டம் 80 அடிக்கு கீழே சரியும் போது கிறிஸ்தவ ஆலயக் கோபுரங்கள் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கும். நீா்மட்டம் 80 அடிக்கு மேலே உயரும்போது அந்த ஆலயக் கோபுரங்கள் மீண்டும் நீரில் மூழ்கி விடும்.

ஜூலை 8-ஆம் தேதி மேட்டூா் அணை நீா்மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்ததால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயக் கோபுரம் வெளியே தெரிந்தது. தற்போது மேட்டூா் அணை நீா்மட்டம் 80.89 அடியாக உயா்ந்ததால் அந்தக் கோபுரம் மீண்டும் நீரில் மூழ்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.