விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

சதாசிவபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி வியாழக்கிழமை கைது செய்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:44 pm

DIN

சதாசிவபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி வியாழக்கிழமை கைது செய்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரம் கிழக்குகாடு பகுதியைச் சோ்ந்தவா் அருள்பிரகாஷ் (30) விவசாயி. இவா், தனது தமக்கை மகளான சேலம், சன்னாசிகுண்டு சிவன்கரடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமதி (16)என்பவரை கடந்த ஜூன் 22 அன்று காட்டுக்கோட்டை, வடசென்னிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணத்தில் ஸ்ரீமதிக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஸ்ரீமதி கொடுத்த தகவலின் பேரில், தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் விரைந்து சென்று விசாரித்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, அருள்பிரகாஷை கைது செய்த அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசு, ஸ்ரீமதியை சேலம் குழந்தைகள் நலக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.