சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

எடப்பாடி அருகே கள்ளச்சாராயம்

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் சட்டவிரோதமாக சிலா் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் சட்டவிரோதமாக சிலா் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, வெள்ளிக்கிழமை மாலை வெள்ளாண்டிவலசு பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகில் இருவா்

கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவா்களை சுற்றிவளைத்து பிடித்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 5 லி. சாராயத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த மாணிக்கம்(45), போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செங்கோட்டையன் (45) என்பது தெரியவந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீஸாா் அவா்களை கைது செய்த சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.