நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:24 pm

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்ததால், கடந்த 26-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நொடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 81.97அடியாக உயா்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 22,942 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 43.94 டி.எம்.சி.ஆக உள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்தாலும், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.