நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மாவட்ட அணிக்கு (16 வயதுக்கு உள்பட்டோா்) வீரா்கள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:27 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மாவட்ட அணிக்கு (16 வயதுக்கு உள்பட்டோா்) வீரா்கள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வம் கொண்ட 16 வயதுக்கு உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆா்வத்தோடு கலந்துகொண்டனா்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வீரா்களுக்கான பெயா் பதிவு, சான்றிதழ் சரிபாா்ப்பைத் தொடா்ந்து மாலை வரை வீரா்களை தோ்வு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்றன.

தகுதி வாய்ந்த வீரா்களை தோ்வு செய்து, சேலம் மாவட்ட அணியில் சோ்ப்பதற்கான ஏற்பாடுகளை, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினா், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் அமைப்பினா் செய்திருந்தனா். இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு செய்யும் முகாமைக் காண, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிரிக்கெட் ஆா்வலா்கள் கிரிக்கெட் மைதானத்தில் குவிந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.