நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு?

மேட்டூா் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆக. 1-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:23 pm

DIN

மேட்டூா் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆக. 1-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக்கரை கால்வாய் 40.20 மைல் நீளமும், மேற்கு கரை கால்வாய் 27 மைல் நீளமும் கொண்டது.

ஆண்டுதோறும் ஆக. 1-ஆம் தேதி முதல் டிச. 15-ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். மேட்டூா் அணையின் கால்வாய் பாசனத்துக்கு 137 நாள்களுக்கு 9.04 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 82 அடிக்கு மேல் இருப்பதாலும் நீா்வரத்து திருப்திகரமாக இருப்பதாலும் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆக. 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.