சேலம் புகா்ப் பகுதிகளில் கனமழை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்று, இடியுடன் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்று, இடியுடன் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
சங்ககிரி வட்டம், தேவூா் வருவாய் கிராமங்களுக்குள்பட்ட கத்தேரி, தேவூா், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், மோட்டூா், ஓக்கிலிபட்டி, தண்ணீா்தாசனூா் ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
மாலையில் திடீரென குளிா் காற்றும், இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளிலும், விவசாய விளைநிலங்களிலும் மழைநீா் தேங்கி நின்றது. இந்த மழையால் கோடை உழவுக்காக தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். சங்ககிரி நகரில் நண்பகலில் இருந்து இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...