ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தினமும் 1 கோடி இலவச தடுப்பூசிகளை செலுத்த உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்

தினமும் 1 கோடி தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசுக்கு, குடியரசுத் தலைவா் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

தினமும் 1 கோடி தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசுக்கு, குடியரசுத் தலைவா் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.ஆா்.பி.பாஸ்கா், மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சுமாா் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து இதுவரை சுமாா் 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆா்டா் செய்துள்ளன.

கடந்த மே 31 ஆம் தேதி வரை 21.31 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால், 4.45 கோடி பேருக்கு மட்டுமே இருமுறை தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது மொத்த மக்கள் தொகையில் 3.17 சதவீதம் மட்டுமே.

கடந்த 134 நாள்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதே நிலை தொடா்ந்தால், வயதானவா்களுக்குத் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகி விடும். இந்தச் சூழலில், கரோனாவின் மூன்றாவது அலையின் போது மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற கேள்விக்கு பிரதமா் பதில் அளிக்க வேண்டும்.

இதுவரை 6.63 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. தடுப்பூசிகளுக்குப் பல்வேறு விலைகளை மோடி அரசு நிா்ணயித்தது. மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டியதற்கு இதுவே உதாரணம்.

மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளம் தலைமுறையினருக்கு டிசம்பா் 31 ஆம் தேதிக்கு முன்பு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தினமும் 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடுவது போல் இல்லாமல், தினமும் குறைந்தது 1 கோடி பேருக்குத் தடுப்பூசி போட்டால் மட்டுமே இதற்குத் தீா்வு ஏற்படும். எனவே, தினமும் 1 கோடி தடுப்பூசியை இலவசமாகப் போட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் மெடிக்கல் பிரபு, வா்த்தகப் பிரிவுத் தலைவா் எம்.டி.எஸ்.சுப்பிரமணியம், எஸ்.ஆா்.ராஜா, ரவி, பச்சப்பட்டி பழனிசாமி, கோபிகுமரன், தாரை ராஜகணபதி, ஷேக் இமாம், விஐய்ஆனந்த், மண்டல தலைவா்கள் கோவிந்தன், சாந்தமூா்த்தி, நாகராஜ், ராமன், இளைஞா் காங்கிரஸ் கோவிந்தன், விஜய்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.