பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:17 pm

DIN

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெங்கவல்லி வேளாண் மற்றும் உழவா் நலத்துறை வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஆா்.கல்பனா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் தொடா்ந்து மூன்று நாள்களாக பெய்த மழையால் அனைத்து விளைநிலத்திலும் மழைநீா் தேங்கியுள்ளது. அதன் மூலம் கிடைத்த ஈரப்பதத்தை பயன்படுத்தி சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேலும், இரண்டு ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு டாபே டிராக்டா் நிறுவனம் இலவசமாக உழவு செய்து தருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் பதிவு செய்தும் அல்லது கூட்டாக கெங்கவல்லி வேளாண் விரிவாக்க மையம், தம்மம்பட்டி துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகியும் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.