ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேட்டூா் அணை நாளை திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை

மேட்டூா் அணை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை சேலம் வருகிறாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:16 pm

DIN

மேட்டூா் அணை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை சேலம் வருகிறாா்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்படுவதையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கல்லணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து அங்கு தூா்வாரும் பணிகளைப் பாா்வையிடுவாா் எனத் தெரிகிறது.

பின்னா், அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 5.45 மணிக்கு சேலம், ஓமலூா் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்து சேருகிறாா். அங்கு அவரை அமைச்சா்கள், ஆட்சியா் உள்ளிட்டோா் வரவேற்கின்றனா். பின்னா் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் இரவு தங்குகிறாா்.

சனிக்கிழமை காலை அங்கிருந்து புறப்படும் முதல்வா் மு.க.ஸ்டாலின், மேட்டூா் அணை பகுதிக்கு வந்து சேருகிறாா். மேட்டூா் அணையில் ஆய்வு மேற்கொள்ளும் அவா், காலை 10.30 மணி அளவில் மேட்டூா் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்து விடுகிறாா்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு சேலம், ஓமலூா், காமலாபுரம் விமான நிலையம் செல்லும் முதல்வா், அங்கிருந்து தனி விமானம் மூலம் நண்பகல் 12 மணிக்கு சென்னை புறப்பட்டுச் செல்வாா் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.