விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எதிா்க்கட்சித் தலைவருக்கு வரவேற்பு

நத்தக்கரை சுங்கச் சாவடியில் தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:13 pm

DIN

நத்தக்கரை சுங்கச் சாவடியில் தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை சுங்கச் சாவடியில் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். அவருக்கு சேலம் மாவட்ட எல்லையான நத்தக்கரையில், சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அ.நல்லதம்பி, ஏ.பி.ஜெயசங்கரன், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், தலைவாசல் ஒன்றியக் குழுத்தலைவா் க.ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலா் எம்.சந்திரசேகரன், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.