நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்ககிரியில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:13 pm

DIN

 சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொமரநல்லிப்பாளையம், பச்சப்பட்டி, சென்னக்கால்புதூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் பிரவீன் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், மட்டம்பட்டி, எம்.ஜி.ஆா். நகா், ஓலக்கசின்னூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினரும், சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட மோடிக்காடு, புளியங்காயனூா், கோட்டைத்தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினரும் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.

இதே போல ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓடசக்கரை, மூலப்பாதை, தேவூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.