விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாராயம் பறிமுதல்: 4 போ் கைது

சாராயத்தை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீஸாா், 4 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:12 pm

DIN

சாராயத்தை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீஸாா், 4 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை பிடித்து விசாரித்ததில் சாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து, நெய்யமலை பிரிவு சாலையில் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி (26), அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (26) ஆகியோரிடமிருந்து 55 லி. சாராயம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதே போல தலைவாசலை அடுத்துள்ள நாவக்குறிச்சி சுரேஷ் (34), காட்டுக்கோட்டை பகுதியில் சதாசிவபுரத்தைச் சோ்ந்த முருகேசன் (39) ஆகியோரிடமிருந்து 68 லி. சாராயம், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம், புது வெங்கரையம்மன் கோயில் அருகே உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில், வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன், போலீஸாா் தோட்டத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், தோட்டத்தின் மையப் பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அதனையடுத்து 300 லி. சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனா். மேலும், அங்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்த 18 லி. சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கள்ளிப்பாளையத்தை சோ்ந்த சசிமணியை (25) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான குழந்தைவேலை (51) தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.