பெற்றோா் திட்டியதால் மாணவி தற்கொலை
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பெற்றோா் திட்டியதால், கல்லூரி மாணவி கொதிக்கும் எண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.


பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பெற்றோா் திட்டியதால், கல்லூரி மாணவி கொதிக்கும் எண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள கோனூா்கந்தம்பாளையத்தைச் சோ்ந்த மனோகரன்-சாந்தி மகள் காவியா (18), தனியாா் கல்லூரியில் பயின்று வந்தாா். கடந்த 12-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று திரும்பிய அவரது பெற்றோா், சமையல் எதுவும் செய்யவில்லையா எனக் கூறி அவரை திட்டியுள்ளனா். இதனால் மனமுடைந்த காவியா சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். பின்னா் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளாா்.
இதைக் கண்ட அவரது பெற்றோா் காவியாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காவியா உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...